அரசியல் தமிழகம்

பாஜகவுடன் இருந்து நாங்கள் பிரிவோம்!அதிமுக அமைச்சர் திடீர் பல்டி!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நேற்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார்.

அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், பிஜேபியிடம் இருந்து நாங்கள் தனியாக செல்வதற்கு  நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம்.

உள்ளாட்சி தேர்தல் எங்கள் கட்சியில் இருந்தது 5 ஓட்டுக்கள் 3 ஓட்டுக்களில் எத்தனையோ பேர் தோற்றுள்ளார்கள். அதை நாங்கள் சொல்லி அறிவித்திருக்கலாமே, அதை நாங்கள் செய்யவில்லை. ஏனென்றால் முதலமைச்சர் அவர்கள் எந்த வேலையையும் சரியாக செய்ய சொல்லியுள்ளார்கள் என அமைச்சர் பாஸ்கரன் அவர் கூறினார்.

இந்த நிலையில், தனது கருத்தில் இருந்து பின்வாங்கிய அமைச்சர் பாஸ்கரன் பாஜக உடனான எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க  முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


Advertisement