தமிழகம் சமூகம்

பேஸ்புக் மூலம் 2 ஆண்டுக்கு பிறகு குடும்பத்தில் இணைந்த நபர்; உறவினரின் நெகிழ்ச்சியான தருணங்கள்.!

Summary:

mendaly disabled persen muthu

2 ஆண்டுகளுக்குப் பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பேஸ்புக் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளதால் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காலவாய் பொட்டலை சேர்ந்தவர் முத்துபாண்டியன் மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் காணாமல் போன முத்து பாண்டியனை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். ஆனால் முத்துப்பாண்டி கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்திலும்  மன வேதனையிலும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு தொண்டு நிறுவனம் அவரை மீட்டு அவருடைய புகைப்படம், பெயர்கள் தொடர்பான விபரங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

mentally retired person rejoining with his family with the help of face book

பேஸ்புக் பதிவினை கண்ட உறவினர்கள் காவல் துறையின் உதவியோடு தொண்டு நிறுவனத்தில் தொடர்புகொண்டு முத்து பாண்டியனை மீட்டுள்ளனர். இது குறித்து  தொண்டு நிறுவனம் தெரிவிக்கையில், புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் முத்து பாண்டியன் அலைந்து திரிந்ததாகவும் அவரை அவரை மீட்டு இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்களது நன்றியினை தொண்டு நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்கள்.


 


Advertisement