மாணவி கொடுத்த நீட் மதிப்பெண் சான்றிதழ்.. வாங்கி பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

மாணவி கொடுத்த நீட் மதிப்பெண் சான்றிதழ்.. வாங்கி பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..



medical-student-counselling-girl-provide-fake-certifica

மருத்துவப் படிப்பு கலந்தாய்வின்போது நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற மாணவி ஒருவர் 610 மதிப்பெண் என போலி நீட் சான்றிதழ் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை எழுதி முடித்த மாணவ மாணவியர்களுக்கு என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை மதிப்பெண் சான்றிதழை அளிக்கிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் இந்த மதிப்பெண் சான்றிதழை கலந்தாய்வுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் மாணவர்கள் கொண்டுவரும் இந்த மதிப்பெண் சான்றிதல்கள் உண்மையானதுதானா என சோதிப்பதற்கு கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் தனி குழு அமைக்கப்பட்டு உடனுக்குடன் ஆன்லைன் மூலம் என்டிஏ வழங்கியிருக்கும் சான்றிதழ் விவரங்கள் சரிபார்க்கபடும்.

இந்நிலையில் கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவி ஒருவர் கொண்டுவந்த நீட் மதிப்பெண் சான்றிதழை வாங்கி சோதனை செய்தபோது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த மாணவி கொண்டுவந்த மதிப்பெண் சான்றிதழில் 610 மதிப்பெண்கள் என இருந்துள்ளது. ஆனால் உண்மையான சான்றிதழ் விவரங்களை ஆன்லைனில் சோதனை செய்தபோது வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே இருந்துள்ளது.

மதிப்பெனில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததால் மாணவி கொண்டுவந்த சான்றிதழ் போலியான சான்றிதழாக இருக்கலாம் என கருதி, இது தொடர்பாக சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தாங்கள் என்டிஏ சான்றிதழின் நகளைத்தான் கொண்டுவந்திருப்பதாக மாணவியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் தந்தை, பல் மருத்துவராக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.