மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.!

மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.!



mattur dam - extra water supply - former happy

பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள கூடுதல் தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்துவந்த மழையின் அளவு குறைந்து வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால், விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாய பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர்  தேவைப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விநாடிக்கு 13,000 கனஅடியில் இருந்து, 17,000 கனஅடியாக அரசு அதிகரித்துள்ளது. மேலும் கிழக்கு மேற்கு கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை விநாடிக்கு 700 கனஅடியில் இருந்து 850 கனஅடியாக உயர்த்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.88 அடியாகவும் நீர்வரத்து விநாடிக்கு 3,926 கனஅடியாகவும் உள்ளது.