தமிழகம்

கொரோனாவை விரட்ட மதுரையில் மாஸ்க் புரோட்டா அறிமுகம்..! மக்களிடம் விழிப்புணவை ஏற்படுத்த புது முயற்சி.!

Summary:

Mask parotta going viral in Madurai

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும்நிலையில் மக்களிடையே மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையில்  பிரபல உணவகம் ஒன்று மாஸ்க் வடிவத்திலான புரோட்டாவை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் சம்பவம் வைரலாகிவருகிறது.

சீனாவின் உஹான் நகரில்  இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை குறித்து அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையியல் மதுரையில் பிரசித்திபெற்ற உணவகம் ஒன்றில் மாஸ்க் புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் மூலம் மக்களிடையே மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என அந்த கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.


Advertisement