தமிழகம் Covid-19

கொரோனா நிவாரணத்திற்காக ரூ. 3 கோடி பொருட்களை அள்ளிக்கொடுத்த மார்டின் குழுமம்.!

Summary:

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் தி

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில்கொரோனா நிவாரண பணிகளுக்கு பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. 

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த நிதியை அனுப்பிவைக்கலாம், யார் எவ்வளவு நிதி உதவி செய்தார்கள் என்பதும், அதன் செலவு விவரங்களும் வெளிப்படையாக இருக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் நிவாரண நிதிகளை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், லாட்டரி தொழிலதிபர் மார்டின் சார்பாகவும், மார்டின் குழுமம் சார்பாகவும் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள உயிர் காக்கும் உபகரணங்களை அக்குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். 

அவர்கள், ரூ 3 கோடி மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர்காக்கும் மருந்துகள், முகக் கவசம் உள்ளிட்டவற்றைக் கொடுத்துள்ளனர்.
 


Advertisement