தமிழகம்

மணமேடையில் புதுமாப்பிள்ளைக்கு வாட்ஸப்பிற்கு வீடியோ அனுப்பி அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்! நின்றுபோன திருமணம்!

Summary:

marriage stopped for whats app video

சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அயனாவரத்தை சேர்ந்த நபருக்கும் பெற்றோர்களால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, நிச்சயம் முடிந்து கடந்த 10ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்தநிலையில், திருமணத்திற்கு முதல் நாள் 9ஆம் தேதி மாலை இருவருக்கும் திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மேடையில் இருந்த மணமகனின் செல்போன் வாட்ஸப்பிற்கு தனக்கு மனைவியாக போகும் புதுப்பெண் வேறு ஒரு வாலிபருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ தொடர்ந்து வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் உடனடியாக வரவேற்பு விழா மற்றும் திருமணத்தை நிறுத்தினார். இதனையடுத்து மணமகன் தனது திருமண விழாவிற்கு வந்த உறவுக்காரப் பெண் ஒருவருக்கு தாலிக்கட்டி, அதே நாளில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மணமகனுக்கு புகைப்படங்களை அனுப்பி மகளின் திருமணத்தை நிறுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளம்பெண் வீட்டின் அருகில் உள்ள வாலிபரை காதலித்து வந்ததும், ஆனால், பெற்றோர் காதலை ஏற்க மறுத்து உடனடியாக வேறு ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணும், காதலனும் சேர்ந்து திருமணத்தை நிறுத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் தனது மகளை காதலனுடன் சேர்த்து வைக்க போலீசாரிடம் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


Advertisement