மணமேடையில் மணப்பெண் சொன்ன ஒத்த வார்த்தை.! நின்றுபோன திருமணம்.! அதிர்ச்சி காரணம்.!

மணமேடையில் மணப்பெண் சொன்ன ஒத்த வார்த்தை.! நின்றுபோன திருமணம்.! அதிர்ச்சி காரணம்.!


marriage stopped for love issue

நீலகிரி மாவட்டத்தில் ஆனந்த் என்பவருக்கும், பிரியதர்ஷினி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமக்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அவர்களது சமுதாய வழக்கப்படி மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பிறகே தாலிகட்ட வேண்டும். 

இந்தநிலையில் மணப்பெண்ணிடம் சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி, சம்மதமில்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். மேலும் அங்கிருந்தவர்கள் என்ன காரணம் என்று கேட்டபோது தான் ஒருவரை விரும்புவதாகவும், அவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு வந்து விடுவார் என்றும் கூறியுள்ளார்.

marriage

ஒருகட்டத்தில் மணப்பெண் மணமேடையில் இருந்து வெளியே செல்ல முயன்றபோது, பிரியதர்ஷினியின் உறவினர்கள், பிரியதர்ஷினியிடம் கோபமாக நடந்துகொள்ள முயன்றனர். அந்த சமயத்திலும் காதலனுக்காக நம்பிக்கையுடன் நாள் முழுவதும் காத்திருந்த பிரியதர்ஷினிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அன்றையதினம் முழுவதும் அவரின் காதலன் அங்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணமும் தடைபெற்றது. இதனால் விரக்தியடைந்த பெற்றோர் பிரியதர்ஷினியிடம் கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மனவேதனையடைந்த பிரியதர்ஷினி காதலனைத் தேடி சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.