அரசியல் தமிழகம்

ஊரே வீட்டிற்குள் முடங்கியதருணம்! முக கவசம் அணிந்து விஜயகாந்த் வீட்டில் நடத்த திருமணம்! கேப்டனை பாராட்டும் மக்கள்!

Summary:

Marriage in vijayakanth home

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்நோயால் 415 பேருக்கும் க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

நேற்று மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி சென்னை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் தே.மு.தி.க. மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் ஆர்.வேணுராம் மகன் விமல்குமார் மற்றும் கமலி ஆகியோருடைய திருமணம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடத்துவதற்கு அவர்களுடைய குடும்பத்தினர் முடிவெடுத்து பத்திரிகைகள் அச்சடித்து, தங்களுடைய உற்றார், உறவினர்களுக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் மக்கள் ஊரடங்கு நிகழ்ச்சியால், விமல்-கமலி ஆகியோரின் திருமணம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் 2 வீட்டாரும் கவலையில் இருந்துள்ளனர். இந்த தகவல் தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்துக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விஜயகாந்த் எந்த காரணம் கொண்டும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடை படக்கூடாது என நினைத்து, விமல்குமார்-கமலி ஆகியோரின் திருமணத்தை, தன்னுடைய வீட்டில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் நடத்தி வைத்தனர். ஊரடங்கு நிகழ்வையும் கடைபிடித்து, தான் வீட்டில் கட்சி நிர்வாகிக்கு திருமணம் செய்துவைத்த கேப்டனை தமிழக மக்கள் பாராட்டி வருகின்றனர். 


Advertisement