மணமேடையில் வரதட்சணையை அள்ளிக்கொடுத்த மாமனார்! மாப்பிள்ளையின் ஒத்த பதிலால் பேரதிர்ச்சியில் மூழ்கிய கல்யாண வீடு!



mappillai refuses dowry

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வருபவர்  ஜிதேந்திர சிங். இவருக்கு சமீபத்தில் இளம் பெண் ஒருவருடன் சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரின் முன்பும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அப்போது திருமண மேடையில் ஜிதேந்திராவிடம் அவரது மாமனார் 11லட்சம் ரூபாய் வரதட்சணையாக வழங்கியுள்ளார். 

அப்பொழுது ஜிதேந்திரா சிங்,  இந்த வரதட்சணை பணம் எனக்கு வேண்டாம், என கூறி அதனை திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில் மாப்பிள்ளை அவ்வாறு கூறியதும் அவர் அதிகளவு வரதட்சணை எதிர்பார்கிறாரோ என அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தனர். 

marriage

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு பிறகு மாப்பிளை  எனக்கு இவ்வளவு வரதட்சணை வேண்டாம் ஒரு தேங்காயுடன் வெறும் 11 ரூபாய் பணம் வைத்துக் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதனை கேட்டதும் மணப்பெண் குடும்பத்தார் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து மாப்பிள்ளை ஜிதேந்திரா கூறுகையில் நான் வரதட்சணை வாங்கக்கூடாது என முதலிலேயே எனது பெற்றோருடன் சேர்ந்து முடிவு செய்துவிட்டேன். எனக்கு நான் எதிர்பார்த்த மாதிரியே நல்ல மனைவி அமைந்துள்ளார். இந்நிலையில் வரதட்சணை வேண்டாம் என்பதை திருமண மேடையிலேயே தெரிவிக்கலாம் என ரகசியமாக வைத்திருந்தோம் என அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது