"அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்! எங்களுக்கு ஒரு சட்டமா?" போராட்டத்தில் குதிக்கும் மாட்டுவண்டி தொழிலாளர்கள்

"அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்! எங்களுக்கு ஒரு சட்டமா?" போராட்டத்தில் குதிக்கும் மாட்டுவண்டி தொழிலாளர்கள்



manal tholilaalargal in ariyalur

லாரி லாரியாக மணல் அள்ளும் அரசியல்வாதிகலை எல்லாம் விட்டுவிடுகிறார்கள். ஆனால் வயிற்றுப்பிழைப்பிற்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளும் எங்கள் மீது மட்டும் வழக்கு போடுகிறார்கள் மாட்டுவண்டி தொழிலாளர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் 30ஆம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாக அரியலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதை குற்றமென ஒருசிலர் போராடிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் பெரும் அரசியல்வாதிகளை மட்டும் மணல் அள்ள அனுமதிக்கின்றனர். ஆனால் நாங்கள் மட்டும் மணல் அள்ளினால் எங்கள் மீது வழக்குப் போட்டு எங்களது மாட்டு வண்டிகளை கைப்பற்றி விடுகின்றனர் என்று தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.

manal tholilaalargal in ariyalur

அரியலூர் மாவட்டம் உதய நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மாட்டு வண்டித் தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை கூட்டத்தில் உடையார்பாளையம் தாலுகாவில் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை என்றும் விவசாயம் அழிந்து வரும் நிலையில் அதன் உப தொழிலாக உள்ள மாட்டு வண்டித் தொழிலைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

manal tholilaalargal in ariyalur

அரியலூர் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருந்த அண்ணக்காரன் பேட்டையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்த மாட்டுவண்டி மணல் குவாரியை அரசு மூடிவிட்டது. எனவே, மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அண்ணாகாரன் பேட்டையில் மூடிய மாட்டுவண்டி மணல் குவாரியை உடனே திறக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் நவம்பர் 30-ம் தேதி உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய சில மாட்டுவண்டி தொழிலாளர்கள், "எங்களின் முக்கிய தொழிலான விவசாயமும் அழிந்து வருகிறது. ஏதோ, அன்றாட வயிற்று பிழைப்புக்காக மாட்டுவண்டிகள் மூலமாகச் சிறிய அளவிலான மணலை அள்ளிவருகிறோம். இதை நம்பி 300 குடும்பங்கள் உள்ளன. அரசின் அனுமதியின்றி மணல் அள்ளியதாக, போலீஸார் மாட்டுவண்டிகளைப் பறிமுதல்செய்து வழக்கு பதிவு செய்துவருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

manal tholilaalargal in ariyalur

அரசியல் காட்சிகளை சேர்ந்த பலர், இரவு நேரங்களில் லாரியில் மணல் கடத்துகிறார்கள். ஆற்றின் நடுவில் பொக்லைன் இயந்திரங்களை வைத்து மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள் என்று புகார் கொடுத்தோம். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆனால், எங்களைக் கைது செய்வதாக மிரட்டுகிறார்கள். இதனால் மாட்டுவண்டியில் மணல் அள்ள மணல் குவாரி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த இருக்கிறோம்." என்று பேசியுள்ளனர்.