தமிழகம்

உடம்பெல்லாம் இரத்தம்! காமகொடூரனிடம் சிக்கி தாய் மற்றும் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

Summary:

Man try to abuse mother and her 3 year baby

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியில் வசித்து வந்தவர் சிங்கராஜா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கு கணவரை பிரிந்து, 3 வயது குழந்தையுடன் வாழ்ந்துவந்த 23 வயது பெண் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து சிங்கராஜா, தனது குடும்பத்தை விட்டுவிட்டு, அந்த பெண்ணை 2வதாக திருமணம் செய்துகொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் சிங்கராஜா அந்த பெண்ணை உறவிற்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிங்கராஜா அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கி,  தலையை சுவற்றில் மோதியுள்ளார். இதனால் உடம்பெல்லாம் அவருக்கு ரத்தம் கொட்டியுள்ளது. 

மேலும் ஆத்திரம் அடங்காத அவர் பெண்ணின் 3 வயது குழந்தையை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து  உடம்பெல்லாம் கடித்து வைத்துள்ளார். இதனால் குழந்தையின் உடம்பிலும் இரத்தம் வழிந்துள்ளது. இந்தநிலையில் எப்படியாவது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என எண்ணிய அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.

இந்நிலையில் ரத்தகாயத்துடன், அவரைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பதறிப்போய் காவல்துறைக்கு தகவலளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு சிங்கராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Advertisement