தமிழகம்

என்னைவிட மனைவிக்கு கொஞ்சம் கம்மி..! அதான் அவ இப்படி பண்ணிட்டா..! கணவன் லக்ஷ்மணனால் நிம்மதி இழந்த மனைவி சாந்தி..!

Summary:

Man tried to kill wife for illegal relationship

மனைவி மீது சந்தேகேமடைந்த கணவன் மனைவியை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் வேலை பார்த்துவரும் லக்ஷ்மணன். 44 வயதாகும் லக்ஷ்மணன் மனைவி பெயர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). உமாவுக்கு வயது 35. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவி தன்னைவிட 9 வயது கம்மி என்பதால் லக்ஷ்மனுக்கு அடிக்கடி தனது மனைவி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டைவரும் என கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியதை அடுத்து லக்ஷ்மன் மனைவியின் சேலையால் அவரது கழுத்தில் இறுக்கி சுற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் சாந்தி மயங்கி கீழே விழவே, மனைவி இறந்துவிட்டதாக நினைத்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் லக்ஷ்மன். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாந்தி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டறிந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement