தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
ஏன்யா!! பொண்டாட்டிகூட சண்டனா அதுக்குன்னு இப்படியா பன்றது..!! 2 மணி நேரம் பரபரப்பை கிளப்பிய 28 வயது இளைஞர்..

தனது மனைவி தன்னை மதிப்பதில்லை என கூறி, கணவன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ஜெபராஜ் (28). இவரது மனைவி ஜெயா. இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெபராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் வாக்கு பதிவு நாளன்று மீண்டும் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ஜெபராஜ், தனது மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டநிலையில், தனது மனைவி தன்னை மதிப்பதில்லை என கூறி அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விருதுள்ளார் ஜெபராஜ்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனே இதுகுறித்து காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் ஜெபராஜ்ஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பத்திரமாக கீழே இறக்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.