தமிழகம் காதல் – உறவுகள்

உன் மனைவி மிக அழகு, அந்த மாதிரி பெண் கிடைத்தால்..நண்பரிடம் வர்ணித்த நபர்! பின் நேர்ந்த விபரீதத்தால் துடிதுடித்து கதறிய மனைவி!

Summary:

man talk to friend about beauty of his wife

நீலகிரி மாவட்டம் இடுதட்டியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் தனது நண்பர் பாரதி என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் இருவரும் விடுதி ஒன்றில் தங்கி மது அருந்தியுள்ளனர்.

அப்போது, இருவரும் தங்களது பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது பாரதி  ராமச்சந்திரனிடம்,உன் மனைவி மிகவும் அழகாகவுள்ளார். அவரிடம் தகராறு செய்யாதே. உன்னைப்போல் எனக்கு மனைவி கிடைத்திருந்தால் அவரை அருமையாக வைத்திருப்பேன் என கூறியுள்ளார்.

ஆனால் ராமச்சந்திரனோ அதை பற்றி பேச வேண்டாம்,  வேறு எதாவது பேசலாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் பாரதி மீண்டும், ராமச்சந்திரன் மனைவி பற்றியே பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் என் மனைவியை பற்றி எப்படி என்னிடமே வர்ணித்து பேசலாம் என கேட்டு தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த பாரதி, ராமச்சந்திரனை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், உறவினர்களுக்கு போன் செய்து மாரடைப்பால் ராமச்சந்திரன்  இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.பின்னர் ராமச்சந்திரனின் உடலை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் ராமச்சந்திரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரன் வாசுதேவன்போலீசாரிடம் புகார் அளித்துளளார்.. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்பொழுது அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்பு இதுகுறித்து பாரதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பொழுது பாரதி ராமச்சந்திரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement