தமிழகம்

மனைவியை அனுப்பிவிட்டு அம்மா முறை கொண்ட பெண்ணுடன் உல்லாசம்..! முட்டுக்கட்டை போட்ட அத்தையைக் குத்திக்கொன்ற இளைஞர்.!

Summary:

Man stabbed his own Aunty due to illegal relationship near Chennai

சித்தி முறை உறவு கொண்ட பெண்ணுடன் தனது அண்ணன் மகன் முறையற்ற உறவு வைத்திருந்த நிலையில் அதனை தட்டிக்கேட்ட அத்தையை வாலிபர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி. இவரது தம்பி லோகு என்பவர் சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனிடையே அதே கொளத்தூர் பகுதியில் வசித்துவந்த குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசன் என்பவருக்கும், அவரது சித்தப்பாவான லோகுவின் மனைவிக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணம் ஆன கணேஷ், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். தற்போது அம்மா முறைகொண்ட சித்தியுடன் கணேஷ் முறையற்ற உறவில் இருப்பது கணேசின் அத்தை குணசுந்தரிக்கு தெரியவந்துள்ளது.

இந்த உறவை கைவிடும்படி குணசுந்தரி தனது அண்ணன் மகன் கணேசனிடம் பலமுறை கூறியும் அவர் கேட்பதாக இல்லை. இதனால் கொளத்தூரில் உள்ள கணேசனின் வீட்டிற்கு நேராக சென்ற குணசுந்தரி இதுகுறித்து கணேஷிடம் பேசி சண்டை போட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, ஆத்திரம் அடைந்த கணேஷ் அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்து தனது அத்தையை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குணசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, தலைமறைவாக இருக்கும் கணேஷை தேடி வருகின்றனர். முறையற்ற உறவை தட்டி கேட்ட சொந்த அத்தையை வாலிபர் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement