AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
"கர்ப்பிணி மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்... " பஸ்ஸில் தள்ளிவிட்டு கொலை செய்த தந்தை.!!
திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணியாக இருந்த மனைவியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் பஸ்ஸில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 2 நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சரவணன். இவரது மகளான சவுபரணி என்பவர் கவுதம் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கவுதமிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவி இடையே சண்டை நடந்துள்ளது. இதன் பிறகு மகளுக்கு அறிவுரை கூறிய சரவணன் கணவருடன் சேர்ந்து வாழுமாறு தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டுக் கொண்ட சவுபரணியும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த சூழலில் கவுதம் தனது மனைவியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இது பற்றி தகவலறிந்த சரவணன் கடும் கோபமடைந்திருக்கிறார். இதனையடுத்து சரவணன் மற்றும் அவரது நண்பர் வேலுச்சாமி ஆகியோர் கவுதமிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் அவரது நண்பன் வேலுச்சாமி ஆகியோர் கவுதமை பேருந்தில் தள்ளிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
இதில் படுகாயமடைந்த கவுதம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட சரவணன் மற்றும் வேலுச்சாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!