தமிழகம்

பட்டப்பகலில் நேர்ந்த கொடூரம்! துடிதுடித்து உயிரிழந்த பெண்! வெளியான அதிரவைக்கும் சம்பவம்

Summary:

Man killed women by attcking using scissors

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் வசித்து வந்தவர் யசோதா ராணி. இவரது கணவர் கோபி. இவர்களுக்கு  இரு குழந்தைகள் உள்ளனர். மேலும்  யசோதா தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர் பகுதியில் தையல்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் யசோதாவிற்கு  கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. மேலும் நேற்று யசோதாவின் தையல்கடைக்கு வந்த செல்வகுமார் நீண்ட நேரமாக அவரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் அருகில் இருந்த கத்தரிக்கோலால் யசோதாவின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்நிலையில் படுகாயமடைந்த யசோதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து யசோதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு செல்வகுமாரையும் கைது செய்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து செல்வகுமாரிடம் விசாரித்ததில் அவர் கூறியதாவது, யசோதா வேறு ஒரு நபருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனால் நான் அவரை கண்டித்தேன். இந்நிலையில் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த நான் யசோதாவை கத்தரிக்கோலால் குத்திவிட்டேன் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement