திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் காதலனுடன் ஓடிய மனைவி; ஒரு ஆண்டுக்குப் பிறகு அடித்துக் கொன்ற கணவன்



man killed wife for illegal afair

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குழந்தைகளை கூட்டிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை ஒரு ஆண்டிற்கு பிறகு அடித்து கொலைசெய்துள்ளார் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே மரியாபுரத்தை சேர்ந்தவர் மோசஸ். இவருக்கும் அரியலுார் மாவட்டம் தொட்டறையை சேர்ந்தவர் லதா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மோசஸ் அபிராமம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் சொந்த கிராமத்திலிருந்து அபிராமத்தில் வசித்து வந்தார். 

illegal affairs

திருமணத்திற்கு முன்பு தொட்டறையில் இருக்கும் போதே லதாவிற்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த தொடர்பு லதாவின் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்தது. இதனால் லதாவிற்கும் மோசஸ் எனக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 2018 மே மாதம் தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு லதா தன் முன்னாள் காதலனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனை தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என அபிராமம் காவல் நிலையத்தில் மோசஸ் புகார் அளித்தார். 

இப்படியே சில நாட்கள் உருண்டோடிய நிலையில் லதா, அபிராமம் முகவரிக்கு தனது பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை விண்ணப்பித்துள்ளார். அபிராமம் காவல் நிலையத்தில் அவரை பற்றி காணவில்லை என்று அவரது கணவர் கொடுத்த புகார் நிலுவையில் இருந்ததால் போலீசார் லதாவை நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த லதா மோசஸ் இடம் பேசியுள்ளார்.

லதாவிடம் அன்பாகப் பேசிய மோசஸ் தன்னுடன் அபிராமம் வீட்டிற்கு வந்தால், தான் அளித்த புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி மோசஸ் உடன் லதா சென்றுள்ளார். அவர்கள் செல்லும் வழியில் அபிராமம் அருகே அகத்தாரிருப்பு விலக்கு ரோட்டில் மோசஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் லதாவை அடித்து அதே இடத்தில் கொலை செய்துள்ளார். தொடர்ந்து அபிராமம் காவல்துறையினர் மோசஸை கைது செய்துள்ளனர்.