தமிழகம்

அக்காவை கொடுமை படுத்திய குடிகார கணவன். தம்பி எடுத்த விபரீத முடிவு! காட்டிக்கொடுத்த செல்போன்!

Summary:

Man killed sisters husband

நாகை மாவட்டம் வெட்டாறு என்னும் பகுதியில் அடையாளம் தெரியாத வகையில் ஆண் சடலம் ஓன்று கிடந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரித்ததில் சடலத்தின் அருகில் தொலைபேசி ஓன்று கிடந்துள்ளது.

அந்த தொலைபேசியை ஆதாரமாக கொண்டு விசாரித்ததில் சடலமாக கிடந்தவர் திருவாரூர் மாவட்டம் கொத்தமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் மகேந்திரனின் மனைவியின் தம்பி கார்த்திக் அவரை வெளியே அழைத்து வந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து கார்த்திக்கிடம் போலீசார் விசாரித்ததில் மகேந்திரனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த சில வாரங்களாக மகேந்திரன் அவரது மனைவியை குடித்து விட்டு அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.

தனது அக்கா படும் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாததால் அக்காவின் கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், இதனால் மது அருந்த பாண்டிச்சேரி செல்லலாம் என கூறி அவரை அங்கு அழைத்து சென்று கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து வழங்கு பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement