காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
அத்தை குடுங்க.!! மறுத்த மாமியார்.. ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்த மருமகன்.. கோவையில் நடந்த கொடூர சம்பவம்..

வீட்டு பாத்திரத்தை கொடுத்த மறுத்த மாமியாரை மருமகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் குப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதாசிவம் - மோகனப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சதாசிவம் கூலி வேலை பார்த்து குடம்பம் நடத்திவந்துள்ளார். இதனால் சதாசிவம் பலரிடம் கடன் வாங்கி, ஒருகட்டத்தில் கடன் சுமை அதிகரித்துள்ளது.
வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்படுவந்த சதாசிவம், வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கடனை திருப்பி செலுத்த முடிவு செய்துள்ளார். ஆனால் சதாசிவத்தின் மாமியார் சாந்தாமணி வீட்டுப்பத்திரத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்றிரவு குடிபோதையில் வந்த சதாசிவம் வீட்டு பாத்திரத்தை தருமாறு மாயாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுக்கவே சதாசிவம் தனது மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.