இரண்டு குழந்தை இருந்தும் தீராத காமம்! காமாட்சியின் செயலால் தினேஷை கொன்று புதைத்த ரவிச்சந்திரன்

மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை கணவர் அடித்து கொலைசெய்து ஏரிக்கரையில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கார் ஓட்டுநராக பணிபுரிந்துவரும் இவருக்கும், காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன்னர்.
இந்நிலையில் காரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருடன் காமாட்சிக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த உறவை கைவிடுமாறு தனது மனைவி காமாட்சியிடம் ரவிச்சந்திரன் பலமுறை கூறியுள்ளார். ஆனாலும் கணவனின் பேச்சை கேட்க்காத காமாட்சி கடந்த 10 நாட்களுக்கு முன் தினேஷுடன் தனியாக சென்று பின் இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.
காரை கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்த அவர்கள் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் இருவரும் தனியாக இருப்பதை பார்த்து ஆத்திரத்தில் அங்கிருந்த கட்டை ஒன்றை எடுத்து தினேஷை பலமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் தினேஷ் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த ஜேசிபி எந்திரத்தில் தினேஷின் உடலை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த ஏரிக்கரை ஒன்றில் குழிதோண்டி புதைத்துள்ளார் ரவிச்சந்திரன். இந்நிலையில் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்த ரவிச்சந்திரன் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஏரிக்கரையில் புதைக்கப்பட்ட தினேஷின் உடல் தோண்டி எடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.