குடும்ப வறுமையை போக்க வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவன்..! அங்கிருந்து மனைவிக்கு வந்த போன் கால்..! 2 வயது குழந்தையுடன் கதறி துடித்த மனைவி..!

துபாயில் வேலை பார்த்துவந்த கணவன் இறந்துவிட்டநிலையில் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவுமாறு இறந்தவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கன்னிமா என்ற பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (40). குடும்ப வறுமை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார் பாஸ்கரன். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவந்த பாஸ்கரன் ஊரடங்கு காரணமாக தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பாஸ்கரன் இறந்துவிட்டதாக துபாயில் பாஸ்கரன் உடன் வேலைபார்க்கும் அவரது நண்பர்கள் சிலர் பாஸ்கரனின் மனைவி சூர்யாவுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளனர். கணவன் இறந்த செய்தி கேட்டதும் கதறி துடித்துள்ளார் அவரது மனைவி.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணமா விமான போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் கணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் சிரமம் இருப்பதை உணர்ந்த அவர், தனது 2 வயது குழந்தையுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தனது கணவனின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர உதவுமாறு மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து இறந்தவரின் உடலை இந்தியா கொண்டுவர உதவுமாறு பொதுத்துறை செயலருக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.