தமிழகம்

கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லை.!! பதறிய லாட்ஜ் ஊழியர்கள்.. திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. லாட்ஜில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை..

Summary:

வேளாங்கண்ணியில் லாட்ஜ் ஒன்றில் இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப

வேளாங்கண்ணியில் லாட்ஜ் ஒன்றில் இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியை சேர்ந்த லூயிஸ் என்பவரின் மகன் ஜார்ஜ் லூர்துராஜ் (24) என்பவர் கடந்த 7-ந் தேதி வேளாங்கண்ணிக்கு வந்து ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கியுள்ளார். இந்நிலையில் ஜார்ஜ் லூர்துராஜ் லாட்ஜில் இருந்து காலிசெய்வதாக கூறிய நேரம் முடிந்தும் அவர் ரூமில் இருந்து வெளியேறவில்லை.

இதனால் லாட்ஜ் ஊழியர்கள் ஜார்ஜ் லூர்துராஜ் தங்கியிருந்த ரூம் கதவை தட்டியுள்ளனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரூமில் உள்ள கழிவறையில் ஜார்ஜ் லூர்துராஜ் தூக்கு மாட்டி சடலமாக தொங்கியுள்ளார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், ஜார்ஜ் லூர்துராஜ் தற்கொலை செய்துகொண்டதிற்கான காரணம் குறித்து விசாரித்துவருகின்றார்.


Advertisement