காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம்.. மனமுடைந்த இளைஞர் செய்த காரியம்.. சிக்கிய உருக்கமான கடிதம்

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம்.. மனமுடைந்த இளைஞர் செய்த காரியம்.. சிக்கிய உருக்கமான கடிதம்


Man commit suicide for love failure near Chennai

காதலிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தநிலையில் மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சென்னையில் மதுரவாயில் அடுத்த ஆலப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். மேலும் அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு மேலே உள்ள அறையில் தங்கி வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு அறைக்கு உறங்க சென்ற பிரபாகரன் காலை நீண்டநேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனிடையே பிரபாகரன் உடன் வேலை பார்த்துவரும் தெய்வமணி என்பவர் வேலைக்கு செல்வதற்காக பிரபாகரனின் அறைக்கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் பிரபாகரன் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது பிரபாகரன் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பிரபாகரனின் அறையை சோதனை செய்தபோது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அதில், "தான் ஒரு பெண்ணை காதலித்துவந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறொரு நபருடன் திருமணம் முடிந்துவிட்டதால் அந்த பெண்ணை மறக்க முடியாத காரணத்தால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியிருந்தார். மேலும், அம்மா... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு தாயாக வரவேண்டும்... கடைசி காலம் வரை உங்களை பார்த்துக்கொள்ளமுடியாத பாவி ஆகிவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள்.. எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை.." என அந்த கடிதத்தில் பிரபாகரன் எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.