சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
சென்னையில் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட மந்திரவாதி... கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் மந்திரவாதி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை காந்தி நகரை சேர்ந்தவர் சிக்கந்தர்(38). இவர் பில்லி சூனியம் வைக்கும் மந்திரவாதியாக இருந்து வந்தார். இந்நிலையில் இவரது வீடு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறையினர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்திருக்கிறார் சிக்கந்தர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கந்தர் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? இது முன் விரோதமாக நடந்ததா அல்லது தொழில் போட்டியில் நடந்ததா? என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.