திருப்பரங்குன்றம் கோவில் அடிவார கடையில் செத்த தவளையுடன் ஜிகிர்தண்டா விநியோகம்.. 3 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு.!Madurai Thiruparangundram Frog Died Ice Cream 3 Children Affected 

மதுரை மாவட்டத்தில் உள்ள கோவலன் நகர், மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் அன்புச்செல்வம். இவரின் மனைவி ஜானகி ஸ்ரீ. தம்பதியின் மகள்கள் மித்ரா ஸ்ரீ (வயது 8), ரக்சனா ஸ்ரீ (வயது 7). அன்புசெல்வத்தின் உறவினர் மகள் தாரணி (வயது 4). 

தைப்பூசத்தை முன்னிட்டு இவர்கள் அனைவரும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு கோவில் அருகேயுள்ள குளிர்பான கடையில் ஜிகிர்தண்டா வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. 

Madurai Thiruparangundram

இதனை குடித்த குழந்தைகள் திடீரென வாந்தி எடுக்க, ஜானகி ஸ்ரீ சந்தேகமடைந்து குளிர்பானத்தை பார்த்தபோது ஜிகிர்தண்டா ஐஸ்கிரீமில் தவளை இறந்து கிடந்துள்ளது. இதனாலேயே அவர்கள் வாந்தி எடுத்துள்ளார்கள் என்பது அம்பலமானது.

இதனையடுத்து, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை அந்தாதி குளிர்பானக்கடை உரிமையாளர் துரைராஜனை (வயது 60) கைது செய்தனர்.