உயிரிழந்த மனைவியின் பிரேதத்துடன் 3 நாட்கள் ஜெபம்.. மருத்துவம் பயின்ற பிள்ளைகளும் பகீர் செயல்.. மதுரையில் அதிரவைக்கும் சம்பவம்.!

உயிரிழந்த மனைவியின் பிரேதத்துடன் 3 நாட்கள் ஜெபம்.. மருத்துவம் பயின்ற பிள்ளைகளும் பகீர் செயல்.. மதுரையில் அதிரவைக்கும் சம்பவம்.!


Madurai Man Japam with son did Died Wife Relife

 

உடல்நலக்குறைவால் உயிரிழந்த மனைவி உயிர்த்தெழுவார் என எண்ணி 3 நாட்கள் ஜெபபூஜை செய்த பயங்கரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம் பயின்ற பிள்ளைகளே மூடநம்பிக்கையால் ஜெபத்தில் கலந்துகொண்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மதுரை எஸ்.எஸ் காலனி ஜானகி நாராயணன் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், தனது மனைவி மாலதி மகன்கள் ஜெய்சங்கர் சிவசங்கர் ஆகியோரோடு வசித்து வருகிறார்.

பாலகிருஷ்ணன் தனியார் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். மூத்த மகன் ஜெய்சங்கர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இளையமகன் சிவசங்கர் தேனியில் செயல்பட்டு வரும் மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக குடும்பத்துடன் கிருத்துவ மதத்திற்கு மாறிய இவர்கள், பகுதி நேரமாக மதபோதக வேலையும் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலதி, கடந்த நவ. 8ம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். 

அவசர ஊர்தி உதவியுடன் மாலதியின் உடல் அடுக்குமாடி குடியிருப்புக்கு எடுத்து வரப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்படாமல் வீட்டில் உடல் வைக்கப்பட்டதால் பதறிபோனவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, உறவினர்கள் வர காலதாமதம் ஆவதால் உடலை வைத்துள்ளோம் என்று கூறியிருக்கின்றனர். பின்னர் 3 நாட்கள் ஆகியும் உடல் எடுக்கப்படவில்லை. இதனால் மீண்டும் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல் துறையினர் விசாரணைக்கு சென்றபோது வீட்டின் கதவை பூட்டியுள்ளனர். 

மேலும், அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்தால் தற்கொலை செய்வோம் எனவும் மிரட்டல் விடுக்க, அவர்களின் வீட்டிற்கு திருநெல்வேலியில் இருந்து உறவினர்கள் என்ற பெயரில் 3 பேர் வருகை தந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 நாட்கள் இறந்த மனைவியின் உடலை வைத்து அவர் உயிர்த்தெழ ஜெபம் செய்தது அம்பலமானது. 

3 நாட்கள் ஜெபம் செய்தால் மனைவி உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் நடத்திய ஜெப சம்பர்தாயங்கள் பொய்த்துப்போக, அவர் எழவில்லை என்பதால் இறுதியாக உடலை ஊரில் நல்லடக்கம் செய்ய எடுத்து செல்ல வந்துள்ளனர்.  மேலும், மருத்துவம் பயின்ற தனது 2 மகன்களை வைத்தே ஜெபத்தை பாலகிருஷ்ணன் நடத்தியுள்ளார் என்ற அதிர்ச்சியும் அம்பலமானது.