தமிழகம்

வைரல் வீடியோ: மதுக்கடைக்கு முன் குடிமகன் செய்த காரியத்தை பாருங்க.. வைரல் வீடியோ காட்சி..

Summary:

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளநிலையில், குடிமகன் ஒருவர

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளநிலையில், குடிமகன் ஒருவர் மதுக்கடையில் ஆரத்தி எடுத்து மது வாங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துவருவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்றுமுதல் தமிழகத்தில் மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

பல நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் பல இடங்களில் குடிமகன்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் மதுரையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு, குடிமகன் ஒருவர் மதுக்கடையை திறந்தபோது, கடைக்கு ஆரத்தி எடுத்து முதல் ஆளாக மதுபாட்டில் வாங்கிச்சென்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement