7 நாள் கெடு.. தடுப்பூசி செலுத்தவில்லை என்றால்... மாவட்ட ஆட்சியர் உச்சகட்ட எச்சரிக்கை.!Madurai District Collector Warning about All Should Can Take At least One Dose of Vaccine

நடப்பு வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்தாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என மதுரை ஆட்சியர் எச்சரித்து இருக்கிறார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா 19 வைரஸ், தற்போது பரிணாம வளர்ச்சியை அடைந்து ஓமிக்ரான் வைரஸாக உருப்பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக பல்வேறு நாடுகளில், அந்தந்த நாடுகளின் தகவமைப்புக்கு ஏற்றாற்போல மாறி வெவ்வேறு பெயர்களில் பரவி வந்தது. 

இந்த ஓமிக்ரான் வகை வைரஸானது மிகவும் அதிதீவிரத்துடன் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இவ்வகை வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

madurai

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மதுரை மாவட்டத்தை சார்ந்தவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது ஒரு வாரத்திற்குள் செலுத்தியாக வேண்டும். 

அவ்வாறு ஒரு வாரம் கடந்த பின்னரும் தடுப்பூசி செலுத்தாமல் பொதுவெளிகளில் வலம்வந்தால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது அவர்கள் உணவகம், ஷாப்பிங் மால் மற்றும் பிற அத்தியாவசிய பொது இடங்களுக்கு செல்லும் போது அனுமதி மறுக்கப்படும்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.