அதிர்ச்சி! கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; அதிரவைக்கும் பின்னணி என்ன தெரியுமா?

அதிர்ச்சி! கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; அதிரவைக்கும் பின்னணி என்ன தெரியுமா?


madurai---college-student---sucide-attempet

மதுரை திருப்பாலை பகுதியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. 
இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளில் ஒருவர் ஆரப் பாளையத்தை சேர்ந்த மீனாட்சி என்ற மாணவி. நேற்று வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்ற அவர் கல்லூரி இடைவேளையின் போது கல்லூரியின் மூன்றாவது மாடிக்கு சென்று உள்ளார்.

கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் உலாவி வந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிறகு இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மேற்கண்ட முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் அந்த மாணவியின் உறவினர் ஒருவர் சாலை விபத்தில் பலியாகியுள்ளார். அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அந்த மாணவி பிறகு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.