மக்களே உஷார்.. அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ கண் தொற்று.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!



Madras Eye Infection Spreading in Chennai: Health Department Issues Public Advisory 

பருவநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ கண் தொற்று அதிகரித்து வருகிறது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அலட்சியம் செய்தால் பார்வை தொடர்பான சிக்கல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Madras Eye Infection: சென்னையில் மெட்ராஸ் ஐ தொற்று நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகும் இந்த தொற்று காற்றின் மூலமாக ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது. மெட்ராஸ் ஐ கண் தொற்று நோய் இமை மற்றும் கண் விழியை இணைக்கும் படலத்தில் ஏற்படுகிறது. 

கண் தொற்று பரவல்:

இந்த தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களை மற்ற நபர்கள் உபயோகிப்பதன் மூலம் அவர்களுக்கும் கண் தொற்று எளிதில் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் பயன்படுத்திய பொருட்களை மற்றொரு நபர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கோடைகாலம் தொடங்கிய நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பலருக்கும் வைரஸ் தொற்று பரவி வருகிறது. 

இதையும் படிங்க: 'மழைநீரில் வெறும் காலில் நடக்காதீங்க'.. வைரஸ் அபாயம்.. தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை.!

Madras Eye Infection

சுகாதாரத்துறை எச்சரிக்கை:

சளி, இருமல், காய்ச்சல் போன்றவை பரவி வந்த நிலையில், அடுத்ததாக மெட்ராஸ் ஐ கண் தொற்றால் பாதிக்கப்பட்டு பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறிகுறிகள்: 

இதன் அறிகுறிகளாக கண் எரிச்சல், கண்ணில் நீர் சுரந்து கொண்டே இருப்பது, கருவிழிப் பகுதியில் சிவந்து காணப்படுவது, கண் இமை ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மருத்துவமனையை அணுகுவது நல்லது. இந்த தொற்று எளிதில் குணப்படுத்தக் கூடியதாக இருந்தாலும் ஆரம்ப நிலையை கடந்தால் கண்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் பார்வை தெளிவற்ற நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

இதையும் படிங்க: Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!