தமிழகம்

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக அள்ளிக்கொடுத்த லைகா நிறுவனம்! எவ்வளவு தொகை தெரியுமா?

Summary:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து பெரும் படிப்புகளை ஏற்படுத்தி

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்தநிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க, படுக்கை வசதி, ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் தடுப்பூசி வாங்குதல் போன்ற கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி செய்யுமாறு தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்ததை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

மேலும் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் கொடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 


Advertisement