தமிழகம்

இளம் பெண்ணிற்கு காதலனின் நண்பன் செய்த துரோகம்! அதிர்ச்சி முடிவெடுத்த காதலன், காதலி!

Summary:

Lovers suicide because of Facebook fake message

பேஸ்புக்கில் தன்னைப்பற்றி தவறாக பதிவு செய்ததால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், காதலி தற்கொலை செய்ததை அறிந்து காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறவன் குப்பத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணும் அவரது அத்தை மகன் விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்துள்னனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் ராதிகாவின் காதலர் விக்னேஷும் நண்பர்களாக இருந்துள்னனர். இந்நேரத்தில், விக்னேஷின் மற்றொரு நண்பரின் தங்கையை பிரேம்குமார் காதலித்து தனது வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் விக்னேஷ் அவன் மற்றொரு நண்பனுக்கு உதவி செய்து தங்கையை பிரேம்குமாரிடம் இருந்து மீட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார் விக்னேஷை பழிவாங்க அவரது காதலி ராதிகா பற்றி தவறாக முகநூல் பக்கத்தில் அவதூறு  பரப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த ராதிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தன்னால்தான் தனது காதலி தற்கொலை செய்துகொண்டார் என்று மனமுடைந்த விக்னேஷ் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகா உள்ள பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.


Advertisement