தமிழகம்

மொட்டை மாடியில் கேட்ட திடீர் அலறல் சத்தம்..! காதல்னா என்னனு கூட தெரியாத சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்..!

Summary:

Love chennai

சென்னை அமைந்தகரை முத்துமாரியம்மன் காலனியில் உள்ள ஒரு வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வந்தவர் நித்தியானந்தன். இவரின் வீட்டிற்கு மேல் தளத்தில் 8 வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. 

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது நித்தியானந்தன் அந்தச் சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுக்கும் முயற்சியில் இருந்திருக்கிறான். அக்கம்பக்கத்தினர் வருவதைப் பார்த்துவிட்டு அவன் தப்பியோடியுள்ளான். 

உடனே அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.போலீசிலும் புகார் கொடுத்துள்ளனர். அப்போது தான் நித்தியானந்தன் அந்தச் சிறுமியை ஒருதலையாகக் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. 

மேலும் பள்ளிவிட்டு வந்து மொட்டை மாடியில் தனியாக விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை அணுகிய நித்தியானந்தன் தன்னை காதலிக்கச் சொல்லி தொல்லை செய்ததாகவும் அவர் சம்மதிக்காததால் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு சிறுமியின் கழுத்தை அறுக்க முயன்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தப்பியோடிய நித்தியானந்தனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement