தமிழகத்தில் கட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு.! கடுமையாக்கப்படுமா ஊரடங்கு.? முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.!

தமிழகத்தில் கட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு.! கடுமையாக்கப்படுமா ஊரடங்கு.? முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.!



lockdown will extended in tamilnadu

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்புக்கான காரணம் குறித்தும், அதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.

lockdown

மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின்னர் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் மருத்துவ குழுவினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், முழு ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கோரொனா பாதிப்பை குறைக்க கட்டுப்பாடுகளை அதிகரித்து ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.