தமிழகம்

இன்னும் இரண்டு நாட்களுடன் முடிவுக்கு வருகிறதா ஊரடங்கு..? மேலும் நீட்டிக்கப்படும்.? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

Summary:

Lock down latest update in Tamil Nadu

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாளுடன் முடிவடையும்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிலவரம், ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது. இந்தியாவும் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக நான்கு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவுக்கு வருகிறது.

அதேநேரம் கொரோனாவின் தாக்கமும் சமீபகாலாமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் அதிலும் சென்னையில் கொரோனாவின் தாக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடியும்நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, அல்லது முடிவு, ஊரடங்கு தளர்வுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலவர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கு குறித்து விரைவில் அடுத்த அறிவுப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement