அரசியல் தமிழகம்

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி பொதுவிடுமுறை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

Summary:

leave in april 18

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu election க்கான பட முடிவு
தேர்தல் நடைபெறும் தினத்தன்று அரசு பொது விடுமுறை விட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தேர்தல்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் தினத்தன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அணைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். தேர்தல் தினத்தன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement