சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
சேலம் வாலிபர் தன்னை ஏமாற்றியதாக பெண் டாக்டர் கூறிய அனைத்தும் நாடகமா? என்ன நடந்தது?
டெல்லியை சேர்ந்த டாக்டர் தமபதியினரின் மகள் ஒருவர் சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அந்த வாலிபருடன் ஹோட்டல் அறையில் தங்கியதாகவும், அந்த வாலிபர் அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு அந்த பெண்ணை கழட்டிவிட்டதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் அந்த செய்தி உண்மை இல்லை என்றும், ஹோட்டல் பில் கட்டாமல் தப்பிப்பதற்காக அந்த பெண் போட்ட நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது. சீனாவில் டாக்டர் படிப்பை முடித்த அந்த பெண் சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் முகநூல் மூலம் பழகியுள்ளார்.
இந்நிலையில் இருவரும், சேலத்தில், உள்ள பிரபலமான சொகுசு ஓட்டலில் தங்கி உல்லாசமாக இருந்தனர். அந்த ஓட்டலில், ஒரு நாள் அறை வாடகை, ரூ.10 ஆயிரம். அதனால், தொடர்ந்து அறை வாடகை கட்ட இயலாமல், காதலனின் பைக்கை அடகு வைத்து, செலவு செய்தனர்.
அந்தப் பணமும் தீர்ந்து விட்டதால், ஓட்டல் பில் 30 ஆயிரத்தை தாண்டியது. இதனால், அந்தப் பெண் டாக்டர் ஒரு வேலை செய்தார். அதிக துாக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டதாக நாடகமாடினார். ஓட்டல் ஊழியர்கள், அவரை உடனடியாக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட அவர் அந்த நபர் என்னை ஏமாற்றிவிட்டார், என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஓடப்பாகிறார், நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போகிறேன் என சமாளித்துள்ளார். இதெல்லாம், அவர் அறை வாடகையைக் கொடுக்காமல், தப்பிப்பதற்காக ஆடிய நாடகம் என்பது, விசாரணையில் தெரிய வந்தது.
இதனைக் கேள்விப்பட்ட, டெல்லியில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோர்கள், சேலத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவம், சேலம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.