தே.மு.தி.க. விலகியதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.! பா.ஜ.க. மாநில தலைவர் தகவல்.!

தே.மு.தி.க. விலகியதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.! பா.ஜ.க. மாநில தலைவர் தகவல்.!



L murugan talk about DMDK

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.தமிழகத்தில் பல காட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளும்  தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது தே.மு.தி.க. ஆனால், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 3-வது அணியான மக்கள்நல கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்று படுதோல்வி அடைந்தது. 

dmdk

இந்தநிலையில் தற்போது, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே தே.மு.தி.க. தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க கேட்ட தொகுதியை அதிமுக கொடுக்கவில்லை. இதனால் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்தார்.

இந்தநிலையில், தே.மு.தி.க. விலகியதால் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதால் தேசிய தலைமை விரைவில் அந்த பட்டியலை வெளியிடும்.  கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியதால் கூடுதல் இடங்களை பா.ஜ.க. பெறுவது கூறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.