தமிழகம்

எனக்கு அதை மட்டும் காட்டுங்களேன்!. என்னால தாங்க முடியவில்லை!. கதறும் அபிராமி!

Summary:

எனக்கு அதை மட்டும் காட்டுங்களேன்!. என்னால தாங்க முடியவில்லை!.

 

 

சென்னை குன்றத்துாரை சேர்ந்த அபிராமி அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் என்பவருடன், கள்ளக்காதல் ஏற்பட்டு, அவருடன் ஓடி போவதற்காக தனது அழகான இரண்டு குழந்தைகளை விஷயம் வைத்து கொலை செய்தார்.

 

இதையடுத்து குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக அபிராமி மற்றும் சுந்தரத்தை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில் அபிராமி நேற்று முன்தினம் சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்பரவியது. இந்த செய்தி பரவியதையடுத்து, அதை சிறை அதிகாரிகள் தற்கொலை முயற்சி செய்யவில்லை என உறுதியாக மறுத்தனர்.

 

சமூகவலைதளங்களில் இது போன்ற தவறாக தகவல்கள் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சில தினங்களுக்கு முன் அபிராமியின் உறவினர் மனு மூலம் அவரை சந்தித்திருக்கிறார். அப்போது அபிராமி என் குழந்தைகளின் நினைவு என்னை வாட்டுகிறது. நான் மன்னிக்க முடியாத தப்பு செய்து விட்டேன். என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும். தயவுசெய்து யாராவது இதை செய்யுங்கள் என கூறி அழுதுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Advertisement