நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து! சென்னையில் பரபரப்பு!
பெத்த மனுசு எப்படி துடிச்சுருக்கும்... மூத்த மகளின் ஐடி கார்டை எடுக்க சென்ற தாய்! திரும்பி வருவதற்குள் 2 வயது இளைய மகள் ரத்த வெள்ளத்தில்....அதிர்ச்சி சம்பவம்!
தமிழகத்தை உலுக்கும் இன்னொரு துயரச் சம்பவமாக, பள்ளி வாகன விபத்தில் இரு வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நிமிட அலட்சியம் எவ்வளவு பெரிய இழப்பை உருவாக்கும் என்பதைக் காட்டும் சம்பவமாக இது மாறியுள்ளது.
பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கிய சிறுமி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மாதம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தனிகாசலம் – ஐஸ்வர்யா தம்பதியரின் இளைய மகள் நிஷா (2) இந்த விபத்தில் உயிரிழந்தார். மூத்த மகளை பள்ளிக்கு அனுப்பும் போது, அடையாள அட்டையை எடுக்க தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
நொடியில் நடந்த கோர விபத்து
அந்த நேரத்தில், பள்ளி வாகனத்தை ஓட்டுநர் திருப்ப முயன்ற போது, அருகில் நின்றிருந்த சிறுமி நிஷா எதிர்பாராத விதமாக வாகனத்தின் அடியில் சிக்கினார். இதில் அவரது தலை நசுங்கி, அந்த இடத்திலேயே சோக விபத்து நிகழ்ந்து சிறுமி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்! வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை! பள்ளி பேருந்தால் நொடிப்பொழுத்தில் நடந்த துயரம்!
கதறி அழுத தாய் – கிராமம் துயரில்
தன்னுடைய கண் முன்னாலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த குழந்தையைப் பார்த்த தாய் ஐஸ்வர்யாவின் கதறல், அங்கிருந்த அனைவரையும் கண்ணீர் விடச் செய்தது. தகவல் அறிந்த உடனடியாக வந்து உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடையாள அட்டையை எடுக்கச் சென்ற ஒரு நிமிட இடைவெளியில் நிகழ்ந்த இந்த பேருந்து விபத்து, மாதம்பள்ளி கிராமம் முழுவதையும் துயரில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் மீண்டும் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த சம்பவத்தால் வலுப்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சி! காலையில் பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுமி திடீரென மயங்கி உயிரிழப்பு! சிவகங்கையில் பெரும் சோகம்!