2023 ல் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடைநீக்கம்.!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடைநீக்கம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படடுகிறது. இப்பள்ளியில் அங்குள்ள சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 187 மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள்.
பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தின் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மஞ்சுநாத் (வயது 43). இவர் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக மாணவிகள் பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தலைமை ஆசிரியரிடமும் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மாணவிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மஞ்சுநாத்திடம் விசாரணை நடந்தது.
விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியாகவே, ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் மஞ்சுநாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.