தமிழகம்

பழிக்குப்பழி.. மாமனாரை போட்டுத்தள்ளிய மருமகனை காத்திருந்து பழிதீர்த்த மனைவி, குடும்பத்தார்..!

Summary:

பழிக்குப்பழி.. மாமனாரை போட்டுத்தள்ளிய மருமகனை காத்திருந்து பழிதீர்த்த மனைவி, குடும்பத்தார்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, பாரூர் பண்ணந்தூர் இந்தியரா காலனியில் வசித்து வருபவர் சொக்கலிங்கம். இவரின் மகன் நரேஷ் குமார் (வயது 40). இவர் இந்திய இராணுவத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சசிகலா (வயது 36). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள் குழந்தைகளாக உள்ளனர்.

நரேஷ் குமார் - சசிகலா இடையே அவ்வப்போது குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சசிகலா வீட்டில் இருந்து வெளியேறி தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த மார்ச் 6 ஆம் தேதி 2021 ஆம் வருடத்தில் மாமனாரின் வீட்டிற்கு சென்ற நரேஷ் குமார், மனைவி பிரிந்து செல்ல அவரின் தந்தை காரணம் என குத்தி கொலை செய்துள்ளார். 

இதில், சசிகலாவின் தந்தையான மகாலிங்கம் உயிரிழந்த நிலையில், இந்த கொலை வழக்கில் நரேஷ் குமாரை கைது செய்த காவல் துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஜாமினில் விடுதலையான நரேஷ் குமார், கடந்த 13 ஆம் தேதி பண்ணந்தூருக்கு சென்றுள்ளார். 

இந்த தகவலை அறிந்த சசிகலாவின் குடும்பத்தினர் நரேஷ் குமாரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். மேலும், அரிவாளால் சரமாரியாக வெட்டவே, நரேஷ் குமார் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதி செய்த நிலையில், அவர் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தேடி வந்தனர். இந்த நிலையில், சசிகலா (வயது 36) நீதிமன்றத்தில் நேரில் சென்று சரணடைந்தார். அவரின் உறவினர்கள் பரமேஸ்வரன் (வயது 38), மகேஸ்வரன் (வயது 30), பரமேஸ்வரனின் மனைவி தீபா (வயது 35), மகேஸ்வரனின் மனைவி ராஜகுமாரி (வயது 27), வடிவேல் (வயது 30), சதீஷ் (வயது 27) ஆகியோர் சரணடைந்தனர்.


Advertisement