புதையல் வேண்டி நண்பனை நரபலி கொடுத்த பயங்கரம்.. ஓசூர் அருகே பேரதிர்ச்சி சம்பவம்.!

புதையல் வேண்டி நண்பனை நரபலி கொடுத்த பயங்கரம்.. ஓசூர் அருகே பேரதிர்ச்சி சம்பவம்.!


Krishnagiri Hosur Man Killed

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கெலமங்கலம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த 28ம் தேதி விவசாய தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தார். இவரின் சடலத்தை மீட்ட கெலமங்கலம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்ததில் நரபலிக்காக கொலை நடந்தது தெரியவந்தது. 

அதாவது, இலட்சுமணனின் விவசாய தோட்டத்தில் புதையல் இருக்கிறது என்று மந்திரவாதி கூறியதை கேட்டு பெண்ணை நரபலி கொடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். அமாவாசை நாளில் பெண் வராத நிலையில், கோழியை பலியிட்டு நரபலி பூஜை தொடங்கப்பட்டுள்ளது. 

Krishnagiri

அந்த சமயத்தில், திடீரென நிகழ்விடத்தில் இருந்த மணியின் மீது பாய்ந்த லட்சுமணன் தொண்டையை கடித்து கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். சுதாரித்துக்கொண்ட மணி கட்டையை எடுத்து லட்சுமணனை தாக்கி கொலை செய்து தப்பித்து இருக்கிறார். 

பின்னர், லட்சுமணனின் உடலை குழியில் வைத்து மணி பூஜைகளை மேற்கொள்ள, நீண்ட நேரம் காத்திருந்தும் புதையல் கிடைக்காததால் மணி தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, மணியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.