குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் கர்ப்பம்.. உயிரிழந்த பெண்.. கதறும் குடும்பம்.!
கோவை மாவட்டம் அம்மன் குளம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (32 வயது) என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா (வயது 32) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கின்றனர். அவருக்கு ஏற்கனவே, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 22-ல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை மற்றும் தாய் இருவருமே ஆபத்து கட்டத்தில் இருப்பதாக கூறி உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர். அப்போது, குழந்தை ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து சங்கீதாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென சங்கீதா உயிரிழந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் சங்கீதா இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்த மணப்பெண்..." திருமணமான 4 நாளில் சோகம்.!! ஆர்.டி.ஓ விசாரணை.!!

இது பற்றி அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி பேசுகையில், "சங்கீதாவுக்கு உடல் எடை 80 கிலோ. அவருக்கு உயரத்த அழுத்தமும் இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இங்கு சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்ட போது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. எனவே, தாயை காப்பாற்ற முடிவு செய்து குழந்தையை வெளியில் எடுத்தோம். குழந்தை எடுத்த போதே உயிரிழந்த நிலையில்தான் இருந்தது.
ஆறு மாத குழந்தை 800 கிராம் எடை இருக்க வேண்டும். ஆனால், இந்த குழந்தை வெறும் 360 கிராம் தான் இருந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததும் அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மாரடைப்பு உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சங்கீதா உயிரிழந்து விட்டார்.
அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை. ஒரு பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தாலும் அவர் மீண்டும் கர்ப்பமாக 0.5 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன. எங்கள் தரப்பில் இருந்தும் தீவிர விசாரணை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு சித்தப்பா மேல் மோகம்... கணவனுக்கு ஸ்கெட்ச்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்.!