கழுத்தில் தாலியுடன் சமந்தா.. திருமணத்திற்கு பின் வெளியான புதிய லுக்.!
"வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்த மணப்பெண்..." திருமணமான 4 நாளில் சோகம்.!! ஆர்.டி.ஓ விசாரணை.!!
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரையடுத்த கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன், இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களின் 3வது மகள் விஜயசாந்திக்கும், கரடிகுடி அருகே ரஜாபுரம் கிராமத்தை சேர்ந்த ஞானவேலுக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் தாய் வீட்டு விருந்துக்கு வந்த விஜயசாந்தி, கணவர் ஞானவேல் ஆகியோர் மதியம் 2 மணிக்கு விருந்து முடிந்த நிலையில் இருவரும் அங்குள்ள நிலத்திற்கு காரில் சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். அப்போது, விஜயசாந்தி, கணவரிடம் மாடுகளை கட்டி வைத்து வருவதாக கூறி சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொட்டகைக்கு சென்ற அவர் அங்கிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மாலையில் மீண்டும் காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் காரிலிருந்து இறங்கிய விஜயசாந்தி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் விஜயசாந்தியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். விஜய் சாந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தாய் மாமா வீட்டுக்கு போன தம்பதி! திருமணமாகி 3 வருஷமாகியும் குழந்தை இல்லை! செல்லும் வழியில் எடுத்த விபரீத முடிவு!
இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் வரதட்சனை கொடுமையால் நடைபெற்றதா.? அல்லது வேறு ஏதேனும் காரணமுள்ளதா.? என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது. திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விபச்சாரத்தை தட்டி கேட்டதில் தகராறு... அப்பாவி பெண் தூக்கு போட்டு தற்கொலை.!! உறவினர்கள் போராட்டம்.!!