மு.க.ஸ்டாலின் தவறான கருத்துக்களை கூறுகிறார்! கவர்னர் குற்றச்சாட்டு!

மு.க.ஸ்டாலின் தவறான கருத்துக்களை கூறுகிறார்! கவர்னர் குற்றச்சாட்டு!


kiranbedi talk about mk stalin


புதுவை காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவந்தார். அப்போது ஏனாம் அருகில் உள்ள தீவினை ஆந்திராவுக்கு தாரை வார்க்க கவர்னர் கிரண்பெடி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அவர்களின் குற்றச்சாட்டுக்கு புதுவை கவர்னர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின்  தேர்தல் பிரசாரத்தின்போது சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக உண்மையை விசாரித்திருக்கவேண்டும். ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகி விடாது. ஏனாமில் வெளிப்படையாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகி விடாது. ஏனாமில் வெளிப்படையாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள தீவு எண். 5-ல் சுற்றுச்சூழல் விதிகளை மீறி ரூ.5 கோடிக்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த உண்மைகளை எல்லாம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ளாமல் பேசுவது சரியல்ல. சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. இதுபோன்ற முறைகேடுகளுக்கு துணை போகும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள். மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்காக காங்கிரசுக்கு ஆதரவாக பேசலாம். ஆனால், கவர்னர் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பு ஆதாரங்கள் இல்லாமல் பேசக்கூடாது என தெரிவித்தார்.