முதல்வரை பாராட்டிய திமுக விவசாய அணி செயலாளர்! கட்சியில் இருந்து தூக்கி வீசிய ஸ்டாலின்!

முதல்வரை பாராட்டிய திமுக விவசாய அணி செயலாளர்! கட்சியில் இருந்து தூக்கி வீசிய ஸ்டாலின்!


kb-ramalingam-dismissed-from-dmk

கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தி.மு.க. விலிருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

தி.மு.க. விவசாய அணி செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். நாமக்கல் மாவட்ட தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்தார். இந்த நிலையில், சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் அதிக ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். 

dmk
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆராய வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து தி.மு.க.வின் விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம், கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது. விவசாயிகளுக்கு ஊரடங்கில் இருந்து முதல்வா் விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து தி.மு.க. தலைமைக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து விவசாய அணி மாநில செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டதாகவும், இதற்கான உத்தரவை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக கட்சி பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.