சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
ஐயையோ.. எங்களோட அப்பா - அம்மா எங்களை கொன்னுடுவாங்க.. காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்.!
சாதி மாறி காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி, இருதரப்பு பெற்றோரும் தங்களை ஆணவக்கொலை செய்திடுவார்கள் என்பதால் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி கிராமத்தை சார்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி நல்லம்மாள். இந்த தம்பதிக்கு பிரேம் குமார் என்ற மகன் இருக்கிறார். இதே ஊரில் வசித்து வருபவர் மொட்டையன். இவரது மனைவி அமராவதி. இவர்களுக்கு பொன்மணி என்ற மகள் இருக்கிறார். இருதரப்பும் வெவ்வேறு சமூகத்தார் ஆவார்கள்.
இந்நிலையில், பிரேம் குமாருக்கும் - பொன்மணிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், இருதரப்பும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெண்ணின் தரப்பில், மகளுக்கு கட்டாயம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது.
இதனால் கடந்த 12 ஆம் தேதி பொன்மணி தனது காதலர் பிரேம் குமாருடன் வீட்டினை விட்டு வெளியேறி, கோயம்புத்தூரில் உள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியவரவே, தம்பதியனை தேடி வந்துள்ளனர். காதல் ஜோடிக்கு இந்த தகவல் கிடைக்கவே, பெற்றோர்கள் தங்களை ஆணவக்கொலை செய்ய பார்ப்பதாக புகார் தெரிவித்து, பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. பெண்ணின் பெற்றோர் கரூர் தோகைமலை காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், காதல் ஜோடியை விசாரணைக்கு தோகைமலை அழைத்து செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், தோகைமலைக்கு சென்றால் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் இருதரப்பு பெற்றோர்கள் தங்களை ஆணவக்கொலை செய்திடுவார்கள் என்று தம்பதி பயம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணையை கோவையில் நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.